Thursday, February 10, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 2

சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் ஒருவர், வளர்ப்புப் பிராணிகளை விற்கும் ஒரு கடைக்குள் நுழைந்து, அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு வாடிக்கையாளர், கடைக்காரரிடம் ஒரு C குரங்கு வேண்டும் என கேட்டார்.

கடைக்காரர் ஒரு கூண்டில் இருந்த குரங்கை வெளியில் எடுத்து அதற்கு ஒரு கழுத்துப்பட்டை அணிவித்து அதனுடன் ஒரு சங்கிலியை இணைத்து, வாடிக்கையாளரிடம் தந்த பின், 'இதன் விலை இரண்டு லட்சம் ரூபாய்' என்றார்! வாடிக்கையாளர் பணத்தைக் கொடுத்து விட்டு குரங்குடன் நடையைக் கட்டினார்.

சுற்றுலாவுக்காக வந்தவர், மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாகி, கடைக்காரரிடம், 'ஒரு குரங்கின் விலை இத்தனை அதிகமா? ஏன் அப்படி?' என வினவினார். கடைக்காரர், 'அந்த குரங்கு 'C'-யில் ப்ரொக்ராம் செய்யும் திறமை கொண்டது, அதுவும் வேகமாகவும், நேர்த்தியாகவும், தப்பு (BUG) வராமலும் செய்யக் கூடியது' என்றார்.

சுற்றுலாப் பயணி, மற்றொரு கூண்டிலிருந்த குரங்கை பார்த்து மறுபடி அதிசயித்து, 'இதன் விலை நான்கு லட்சமா? இதற்கு என்னவெல்லாம் தெரியும்?' என்று கேட்டார்! கடைக்காரர் உடனே, 'இது C++ குரங்கு! இதற்கு OOPS, விஷுவல் C++, ஓரளவு ஜாவா ஆகிய பல உபயோகமான விஷயங்கள் தெரியும்!!!' என்றார்.

இன்னும் சற்று நேரம் கடையை சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிக்கு, ஒரு பெரிய கூண்டில் தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு குரங்கின் கழுத்தில் தொங்கிய விலைப்பட்டையில் ரூ.20 லட்சம் என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு, மயக்கமே வந்து விட்டது! 'இதன் விலை 10 குரங்குகளின் விலைக்கு ஈடாக இருக்கிறதே, அப்படியென்ன உலக மகா விஷயம் இதற்குத் தெரியும்?!?!?' என்று வினவினார்.


கடைக்காரர், "இந்தக் குரங்கு இது வரை எதுவும் செய்து நானே பார்த்ததில்லை! ஆனால், கடையில் உள்ள மற்ற குரங்குகள் இதை ப்ராஜெக்ட் மேனேஜர் என்று மரியாதையுடன் அழைக்கின்றன!!!" என்று கூறினார்.

வலைப்பதிவாளர்களில் இருக்கும் மென்பொருள் மேலாளர்கள் மேற்கூறிய வகைப்பட்டவர்கள் அல்லர் என்பதை உறுதியாக நம்பும்

என்றென்றும் அன்புடன்
பாலா

5 மறுமொழிகள்:

யோசிப்பவர் said...

கொன்னுட்டீங்க போங்க!!!(யாரைன்னு கேக்காதீங்க!)

said...

கேட்க மாட்டேன்! யாருன்னு தெரியும் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

கலக்கல் :-)

பரணீதரன்
http://blog.baranee.net

துளசி கோபால் said...

பாலா,

அட்டகாசம் !

என்றும் அன்புடன்,
துளசி.

Vijayakumar said...

உங்க விலை என்ன பாலா? (லைட்டா எடுத்துக்குங்க)....

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails